வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஆபாச வீடியோ பரவல்: நெல்லையில் உள்ள பிரபல செல்போன் கடையில் சைபர் கிரைம் போலீசார் சோதனை


ஆபாச வீடியோ பரவல்: நெல்லையில் உள்ள பிரபல செல்போன் கடையில் சைபர் கிரைம் போலீசார் சோதனை
a to z mobile news photo

சிடிக்கள், மெம்மரிகார்டுகள் உள்பட கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படும் மென்பொருள்கள் குறித்து
செல்போன் கடையில் சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர்.

நெல்லையில் கடந்த சில தினகளுக்கு முன்பு  செல்போன் மூலம் ஒரு ஆபாச வீடியோ காட்சி பரவியது. அதில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அறைகுறை ஆடைகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை வழக்கறிஞர் திருமலைக்குமார் கடந்த 5ம் தேதி சந்திப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதில் இது போன்ற ஆபாசக் காட்சிகளால் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக நெலலையில் உள்ள பிரபல செல்போன் கடை உரிமையாளர்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதற்கிடையே தன்னை போலீசார் தேடுவதை அறிந்த நாதர்ஷா தலைமறைவாகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆபாசக்காட்சி பரவியதாக கூறப்படும் செல்போன் கடையில் சோதனை நடத்த போலீசார் கோர்ட்டின் அனுமதியை நாடினர். இன்று கோர்ட் அனுமதி அளித்ததின் அடிப்படையில்  நெல்லை ஜங்சன் கண்மருத்துவமனைக்கு எதிரே உள்ள  பிரபல செல்போன் கடையில் ஜங்சன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா, கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சிடிக்கள், மெம்மரிகார்டுகள் உள்பட கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படும் மென்பொருள்கள் குறித்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய தகவல்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சனி, 30 நவம்பர், 2013

கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகள் ...இரண்டு நிமிடம் மட்டும் ஒதுக்குங்க.

இரண்டு நிமிடம் மட்டும் ஒதுக்குங்க... பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே… இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர். மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர். உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன. இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி. அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது. அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம். பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன

காதலியை ஈர்ப்பதற்கான 10 வழிகள்!!!

இவ்வுலகில் பிறந்த அனைவருமே ஒரு காலகட்டத்தில் காதல் வயப்படுவது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அப்படி காதலில் விழுந்து உங்களுக்கென ஒரு பெண்ணை நீங்கள் தேர்வு செய்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உங்கள் காதலியுடனான ஒவ்வொரு சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, முதல் மற்றும் அடுத்து வரும் சில சந்திப்புகள் உங்களைப்பற்றி அவர் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும்.
பொதுவாக முதல் டேட்டிங்கின்போது உங்களது கவனம் இருவரது தோற்றத்திலும் இயல்புகளிலும் மட்டுமே இருக்கக்கூடும். ஆனால் இரண்டாவது டேட்டிங் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் விதமாக அமையும். இந்நிலையில் நீங்கள் இருவரும் உங்களைப் பற்றிய விவரங்களை பரிமாறி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பீர்கள். இந்த இரண்டாவது டேட்டிங் உங்கள் இருவரிடையே உருவாகி இருக்கும் உறவை தொடர்வதற்கோ அல்லது முடிவதற்கோ வாய்ப்பாக இருப்பதால், இது ஒரு முக்கிய சந்திப்பாக இருக்கும். உங்களின் உண்மையான அன்பையும் குணத்தையும் உங்கள் காதலியிடம் வெளிப்படுத்தி அவளை ஈர்க்க இந்த இரண்டாவது டேட்டிங் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த இரண்டாவது டேட்டிங்கின்போது உங்கள் காதலி உங்களது இயல்பு குணம், தனிப்பட்ட சொந்த விவரங்கள், மற்றும் உங்கள் எண்ணங்களை பற்றி தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பார். இரண்டாவது டேட்டிங் மட்டும் வெற்றிகரகமாக முடிந்தால், உங்கள் இருவரிடையே இருக்கும் உறவு வலுவடையும் வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் முதல் டேட்டிங்கின்போது திட்டமிட்டு உபயோகித்த வரிகள், கவிதைகள் போன்றவற்றை பற்றிய கவலை இனி தேவையில்லை.
இரண்டாவது டேட்டிங்கின் போது காதலியை ஈர்ப்பதற்கான 10 வழிகள்!!!
உங்கள் காதலியை இம்ப்ரெஸ் செய்வதற்கு நீங்கள் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவரிடம் செயற்கையாக நடந்து கொண்டு அவரை ஏமாற்றாமல் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு முக்கியமாக விளங்குவது நேர்மையே. நீங்கள் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமாக பேசுபவராக இருந்தால் பிரச்சனை இல்லை, அப்படியே தொடருங்கள். இதுவே நீங்கள் அமைதியான நபர் என்றால் சிறிது நகைச்சுவை உணர்வுடன் , செயற்கைதனம் இல்லாமல் உங்கள் பாணியிலேயே பேசுங்கள்.
இரண்டாவது டேட்டிங்கின் போது உங்கள் காதலியை ஈர்க்க இதோ சில வழிகள்...
* உங்கள் இரண்டாவது டேட்டிங்கிற்கு நேர்த்தியாகவும் அழகாகவும் உடை அணியுங்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் உடை அணிவது இப்பொழுதும் அவசியமான ஒன்றாகும். அவர் விரும்பத்தக்க வகையில் அழகாக உடை அணிந்து அவரை இம்ப்ரெஸ் செய்யுங்கள்.
* இரண்டாவது டேட்டிங்கை சற்று தனிமையான முறையில் இருக்குமாறு திட்டமிடுங்கள். இது இரண்டாவது டேட்டிங் என்பதால், உங்கள் காதலிக்கு உங்கள் மேல் சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அதனால், ஒரு வார இறுதியில் அவரை மதிய உணவிற்கோ அல்லது இரவு உணவிற்கோ அழைத்து நீங்களே சமைத்து பரிமாறலாம்.
* இந்த இரண்டாவது டேட்டிங் உங்கள் காதலிக்கு சவுகரியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. அவரை சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்த நகைச்சுவை என்ற பெயரில் எல்லையை தாண்ட வேண்டாம். அதனை விடுத்து, அவரை பற்றி அடிப்படையான விஷயங்கள் மற்றும் சற்று தனிப்பட்ட சொந்த விஷயங்களை தெரிந்து கொண்டு உங்கள் உறவை வலுபடுத்துங்கள். சொந்த விஷயங்களை பற்றி கேட்கும் போது வரம்பு மீறக் கூடாது.
* அவசரப்பட்டு எதையும் செய்யாமல் ஒரு நல்ல பண்பாளராக இருங்கள். உங்கள் காதலியே தானாக முன் வந்து உங்களை தொட அனுமதிக்கும் வரை பொறுமையாக இருங்கள்.
* முதல் டேட்டிங்கின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது டேட்டிங் நிகழ்ந்துள்ளதால் அவருக்கு ஒரு பரிசு கொடுக்க திட்டமிடுங்கள். அதிக விலை உயர்ந்த பொருளாக இல்லாமல் அவர் விரும்பத்தக்க வகையில் அர்த்தமுள்ள பொருளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய பூங்கொத்து கூட அவரை இம்ப்ரெஸ் செய்யலாம்.
* உங்கள் இரண்டாவது டேட்டிங் நல்ல முறையில் இருந்தால், உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்தால் ஒரு மென்மையான முத்தத்தை கொடுங்கள். பிரெஞ்சு முத்தம் போன்றவற்றை தவிர்த்து மென்மையான முத்தத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
* இது உங்கள் இரண்டாவது டேட்டிங் என்பதால், சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் அவளது கண்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக அவரிடம் நீங்கள் வைத்துள்ள ஈடுபாடு வெளிப்பட்டு உங்கள் தன்னம்பிக்கையால் அவரை ஈர்க்கலாம்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை பாராட்டுங்கள். அதிகமாகவோ பொய் புகழ்ச்சியாகவோ இல்லாமல் நீங்கள் அவரிடம் கொண்டுள்ள நேர்மையான அபிப்ராயங்களையும் கருத்துக்களையும் பாராட்டுங்கள். உங்கள் நேர்மையான கருத்துக்களை அவர் கண்டிப்பாக மதிப்பார்.
* வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருங்கள். உங்களது வேலையைப் பற்றியும் சொந்த விவரங்கள் பற்றியும் பொய் சொல்லாதீர்கள். ஒரு பெண்ணை இம்ப்ரெஸ் செய்ய உங்களின் வெளிப்படையான தன்மை மற்றும் நேர்மையை தவிர சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
இந்த டேட்டிங்கின் முடிவு உங்களின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கான தருணமாக இருக்கும். நீங்களே முன்வந்து அடுத்த நடவடிக்கை குறித்து பேசினால் அவர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இருக்கும்.

திங்கள், 25 நவம்பர், 2013

ஆண்மைக் குறைவு என்றால் என்ன?

ஆண்மைக் குறைவு என்றால் என்ன?

ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார்ப்போம்.
புகைப்பழக்கம்
இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.
மதுப் பழக்கம்
மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
உடல் பருமன்
உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது.
தூக்க, போதை மாத்திரைகள்
தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
பக்கவிளைவு
இரத்தக் கொதிப்பு, மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் சில மாத்திரைகள் ஆண்மைக் குறைவை உண்டாக்குவதால் அவற்றுக்கு பதிலாக வேறு வகையான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.
சர்க்கரை நோய்
இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.
சரியான சிகிச்சை
நிபுணத்துவம் பெற்ற பாலியல் மருத்துவர்கள் எழுதிய நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள். இவை பாலுறவு பற்றி பல பயனுள்ள தகவல்களைத் தரும். அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தருகின்ற போலி மருத்துவர்களை அணுகுவது, அஞ்சல் மூலமாக அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கிச் சாப்பிடுவது, வேறுவித சிகிச்சைகள் ஆகியவை கூட அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…

ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம்.துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது. ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்

அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண். 2. வங்கிக் கணக்கு.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர் 1 முதல் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பின் படிப்படியாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் நான்கு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் எப்போது?
அக்டோபர் 2013 – அரியலூர்
நவம்பர் 2013 – திருச்சி, மதுரை, புதுகோட்டை, நாகப்பட்டினம்.
டிசம்பர் 2013 – கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.
ஜனவரி 2014 – தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.
தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை , திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை.
இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?
1.மானியத்தைப் பெற முதலில் உங்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும். இதுவரை ஆதார் எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ,அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களையோ தொடர்புகொள்ளுங்கள்.
ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும் எண் கிடைக்கப்பெறாதவர்கள்,
<https://eaadhaar.uidai.gov.in/eDetails.aspx> இத்தளத்திற்குச் சென்று பின்கோடு, தேதி, என்ரோல்மெண்ட் நம்பர் ஆகிய விவரங்களைப் பதிவிட்டால் உங்களுக்கான ஆதார் எண் வந்துவிடும் அல்லது விண்ணப்பத்தின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 1800 300 1947 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.
2.வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். யார் பெயரில் எரிவாயு இணைப்பு உள்ளதோ அவர்கள் பெயரில் அந்த வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.
3.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும் இருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். ஒன்று வங்கிக்கு (படிவம் எண் 1) மற்றொன்று சிலிண்டர் விநியோகஸ்தருக்கு (படிவம் 2.)
வங்கிக்கான படிவங்களை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது . <http://www.petroleum.nic.in/dbtl/bankacc.pdf> என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படிவம் 2ல் உங்கள் ஆதார் அட்டையை குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வைத்து போட்டோ காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டோ காப்பி எடுத்த படிவத்தில் மற்ற விவரங்களை நிரப்பி, கடைசியாக காஸ் சிலிண்டர் வாங்கிய பில்லை இணைத்து விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும்.
விநியோகஸ்தருக்கான படிவத்தை அவர்களிடமே பெற்றுக்கொள்ளலாம் அல்லது <http://www.petroleum.nic.in/dbtl/leaflet.pdf> என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏஜென்சியில் கொடுக்கலாம்.
கால அவகாசம்…
ஆதார் எண் இல்லாதவர்கள் நேரடி மானியம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை மானிய விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். இம்மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடனும், எரிவாயு இணைப்புடனும் இணைத்துவிட வேண்டும். கால அவகாசம் முடிந்த பிறகும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் சந்தை விலையிலேயே சிலிண்டர் விநியோகிக்கப்படும். எப்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுகிறார்களோ அப்போதிலிருந்து மானியத் தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.
மானியம் எவ்வளவு?
இத்திட்டத்தின்படி அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்ட பின் முதல் தவணையாக 435 ரூபாய் நமது வங்கிக் கணக்கில் வரவாகும். பின்னர் முதல் சிலிண்டர் பெறும்போது சந்தை நிலவரத்திற்கேற்ப மீதித் தொகையைக் கொடுத்து சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த சிலிண்டர் புக் செய்து வினியோகிக்கப்பட்டு 6 நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு அப்போதைய சந்தை நிலவரத்தின்படி 420 ரூபாயைக் கழித்துவிட்டு மீதித் தொகையை நமது கணக்கில் அரசு செலுத்திவிடும். ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் பெறலாம்.
மேலதிக விவரங்களை <http://www.petroleum.nic.in/dbtl>என்ற இணையத்திலோ 1800 2333 555 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்திலோ பெறலாம்.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....!

எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....!

பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யாரேனும் முகம் தெரியாதவர்கள் உங்களது செல்போனை கேட்டால் கொடுப்பதை தவிர்ப்பதே நலம்.

கடந்த மாதம் பாம்பேயில் ஒரு பயணியிடம் அடுத்திருந்த ஒருவர் தனது போனில்
சார்ஜ் இல்லையென கூறி வாங்கி 2..3 ..முறை
யாருடனோ பேசியுள்ளார்...

இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் இந்த செல்போன் காரரின் வீடு தேடி போலிஸ் வந்து
கைது செய்துள்ளனர், ஒரு பெண் கொலை
செய்யப்பட்டுள்ளதாகவும் அவளின் செல்போனில் இவரது நம்பர் இலிருந்தே கடைசி 3 கால்கள் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

போன்காரர் காவல்துறையினரிடம், தனது போனை வாங்கி 2, 3முறை ஒருவர் பேரூந்தில் வாங்கி பேசியதை கூறியும் காவல்துறையினர் சந்தேகம் முழுவதுமாக நீங்கிய பாடில்லை.

பிறகு பேசியவரின் குரலை பதிவு செய்து சோதனை செய்ததில் பேசியவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளார்கள்.

ஆனால் இந்த போன்காரருக்கோ மராத்தி மொழியே
தெரியாது, இன்னமும் வழக்கிலிருந்து பூரணமாக இவர் விடுபடவில்லை.

உதவி செய்யப்போய் உபத்திரவமா?

தெரிஞ்சுக்கலாமா?..........


நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம்
முத்தமிட்டால் அதனால் நீங்கள்
இருவரும் 2.6
கலோரியை எரிக்கிறீர்கள்.

மும்பையில் நீங்கள் ஒரு நாள்
சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட்
உபயோகிப்பதற்கு சமமானது.
இந்தியாவில்
மனிதனுக்கு வேண்டிய
டாய்லெட்டை விட செல்போன்கள்
அதிகம்.

உங்களால்
முக்கை மூடிக்கொண்டு 'ஹம்' செய்ய
முடியாது.

நீங்கள்
கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால்
அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

பெண்கள் ஒரு நாளைக்கு 7000
வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள்
2000 வார்த்தைகள் தான்
பேசுகின்றனர்.

இந்தியாவில் மில்லியன்
மக்களுக்கு 11
ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.
இப்போது வழக்கில் உள்ள
எல்லா கேஸுக்களை முடிக்க 466
ஆண்டுகள் பிடிக்கும்.

நீல நிற
கண்களை உடையோற்கு மற்றவர்களை விட
இரவில் பார்வை திறன் துல்லியமாக
இருக்கும்
காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின்
சிறப்பான கலவைகளால்தான்.

உலகில் பயன்படுத்தப்படும்
பெட்ரோலில் 29 சதவீதம்
அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் உலகின்
பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33
சதவீதம் பயன்படுத்தப்படுவதும்
அமெரிக்காவில்தான்.

ஒரு முறை புன்னகை புரிவதன்
மூலம்
குறைந்தப் பட்சம் 30
தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத
பகுதி எது தெரியுமா? கண்ணின்
கருவிழி. ஏனென்றால்
கருவிழி அதற்கு தேவையான
ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப்
பெற்றுக்கொள்கிறது