வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஆபாச வீடியோ பரவல்: நெல்லையில் உள்ள பிரபல செல்போன் கடையில் சைபர் கிரைம் போலீசார் சோதனை


ஆபாச வீடியோ பரவல்: நெல்லையில் உள்ள பிரபல செல்போன் கடையில் சைபர் கிரைம் போலீசார் சோதனை
a to z mobile news photo

சிடிக்கள், மெம்மரிகார்டுகள் உள்பட கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படும் மென்பொருள்கள் குறித்து
செல்போன் கடையில் சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர்.

நெல்லையில் கடந்த சில தினகளுக்கு முன்பு  செல்போன் மூலம் ஒரு ஆபாச வீடியோ காட்சி பரவியது. அதில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அறைகுறை ஆடைகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை வழக்கறிஞர் திருமலைக்குமார் கடந்த 5ம் தேதி சந்திப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதில் இது போன்ற ஆபாசக் காட்சிகளால் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக நெலலையில் உள்ள பிரபல செல்போன் கடை உரிமையாளர்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதற்கிடையே தன்னை போலீசார் தேடுவதை அறிந்த நாதர்ஷா தலைமறைவாகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆபாசக்காட்சி பரவியதாக கூறப்படும் செல்போன் கடையில் சோதனை நடத்த போலீசார் கோர்ட்டின் அனுமதியை நாடினர். இன்று கோர்ட் அனுமதி அளித்ததின் அடிப்படையில்  நெல்லை ஜங்சன் கண்மருத்துவமனைக்கு எதிரே உள்ள  பிரபல செல்போன் கடையில் ஜங்சன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா, கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சிடிக்கள், மெம்மரிகார்டுகள் உள்பட கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படும் மென்பொருள்கள் குறித்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய தகவல்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக