திருநெல்வேலி . பாளையங்கோட்டை . சங்கரன்கோவில் . அம்பாசமுத்திரம் . தென்காசி . சிவகிரி . செங்கோட்டை . நாங்குநேரி . இராதாபுரம் . ஆலங்குளம் . வீரகேரளம்புதூர் ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . ராதாபுரம் . நாங்குநேரி
Ad
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
சரண கோஷத்திற்கிடையே சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்
சபரிமலை: பக்தர்களின் சரண கோஷத்திற்கிடையே சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி பிரகாசித்தது. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.
சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி துவங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. இன்று மதியம் உச்சபூஜைக்கு பின்னர் அடைக்கப்பட்ட நடை மாலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டது. நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.
பந்தளத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி இன்று மாலை 5.30 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.20 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மாலை 6.40 மணியளவில் மகர ஜோதி ஒளிவிட்டு பிரகாசிக்க துவங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரவிளக்கு காட்சி தந்தது. ஜோதியும், விளக்கும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். கடந்த ஆண்டு புல்மேட்டில் மகரவிளக்குக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக