திங்கள், 26 மார்ச், 2012

சிகரெட் பிடிப்பதால் ஏற்பட கூடிய நன்மைகள்: ஒரு சிறப்பு பார்வை:



Picture
சிகரெட் பிடிப்பதால் ஏற்பட கூடிய  நன்மைகள்:

நம்மில் பல பேருக்கு சிகரெட்  பிடிப்பதால் ஏற்படகூடிய நன்மைகள் முழுதாக  தெரியவில்லை

சிகரெட் பிடிப்பதால் ஏற்பட கூடிய  தீமைகள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் உள்ள நன்மைகளை கூறவே எனது இந்த  முயற்சி!!!

1.சிகரெட் குடிப்பவர்களுக்கு ஞாபக  மறதி அதிகமாகும் வாய்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன..  பொண்டாட்டிய மறக்க                           நினைகின்றவர்கள்,   கடன் வாங்கியத மறக்க              நினைபவர்கள்,காதலில் தோல்வி அடைந்து                காதலியை  மறக்க நினைபவர்களுக்கு சிகரெட் நல்ல மருந்து என்பது இந்த ஆய்வின் மூலம் நிருபிக்க  படுகின்றது...

2. சிகரெட்டுகாக நாம் செலவு செய்வதன் மூலம் நம்முடைய பணத்தாசைக்கு நாம் முற்று புள்ளி  வைக்கின்றோம். (பணம் சேர சேர மணிதனுக்கு தலைகணம்,கர்வம்,அகம்பாவம் அகியவை  உண்டாகின்றது. சிகரெட்  குடிப்பதால் நம்முடைய பணம் விரையமாவதன் மூலம்  தலைகணம்,கர்வம், அகம்பாவம் ஆகிய கொடிய பாவங்களிருந்து தப்பித்து கொள்கின்றோம்.)

3.சிகரெட் குடிப்பதால் இருமல்  அதிகமாகின்றது என ஆய்வு கூறுகின்றது (சிகரெட் குடிப்பவர்கள் இரவில் உறக்கம் வராமல்   இருமுவதின் மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு திருடர்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக  உறங்க முடிகின்றது.

4.நம்மை கஷ்ட படுத்தும்  மனைவியை பழிவாங்க நினைபவர்கள் அதிகமாக சிகரெட் குடிக்கலாம். சிகரெட் குடிப்பதன்  மூலம் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கலாம்.இதிலும் அவர்கள்  திருந்தவில்லை என்றால் அதிகமாக சிகரெட் குடித்து அவர்களை விட்டு நிரந்தரமாக  பிரியலாம். ஏன் என்றால் சிகரெட் குடிப்பவர்களுக்கு ஆயுள் குறைவு என்று ஆய்வு  கூறுகின்றது.

5.சிகரெட் பிடிப்பவர்களை விட, அந்த  புகையை சுவா சிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு   ஏற்படுவதாக தெரிய வந்தது.  குறிப்பாக காது செவிடாகும் நிலை ஏற்படுகின்றன.  சுவாசிக்கப்படும் சிகரெட் புகை,  மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று, காதின்   உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை  கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது. இதனால் ஒலியை வாங்கும் திறன் அந்த  உறுப்பு இழப்பதால் செவிட்டு தன்மை உண்டாகிறது.    மேலும் அடுத்தவர்கள் பேசுவதை  புரிந்து கொள் ளும் சக்தி குறைவதுடன் படிப்பில்   நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை  போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு   ஏற்படுகின்றன. இவ்வாறு ஆய்வில்
தெரியவந்துள்ளது.ஆக நம்முடைய இந்த செயலால் நம்முடைய குழந்தைகள் எந்த விதமா கெட்ட  வார்த்தைகளையும்  கேட்க முடியாது. மேலும் யாரும் நம்முடைய குழந்தைகளை திட்டினாலும்  அது அவர்களுடைய  மனதை பாதிப்படைய  செய்யாது.

6.சிகரெட் குடிப்பதால் நாட்டில்  வளர்ச்சிக்கு நீங்கள் உதவ போகின்றீர்கள்.  ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம் சிகரெட்  பிடிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை  குறைகின்றது. இதன் மூலம் நீங்கள்  தந்தையாகும் வாய்ப்பு குறைகின்றது.ஆக உங்களையும் அறியாமல் நாட்டின்  மக்கள் தொகையை குறைக்க நீங்கள்   உதவுகின்றீர்கள்.

7.சிகரெட் நம்மை நோயாளி ஆக்குகின்றது.ஆனால் இங்கேதான் நாம் மற்றவர்களிடம் இருந்து  வேறுபடுகின்றோம். நாம் நோயாளி ஆனாலும் நம் மூலம் நாலுபேர் பயன் அடைகின்றார்கள் என்ற  சந்தோஷத்தை பெறலாம்.(டாக்டர்கள்,மெடிக்கல் ஓனர்கள்,சிகரெட் தாயாரிப்பாளர்கள்,  மொத்தவியாபாரி மற்றும் சில்லரை வியாபாரி மற்றும் பலர்....) நம்மாலயும் நாலு குடும்பம் பொழைக்குது டோய்ய்ய்ய்ய்...




முக்கியமான  விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு சிகரெட்டில் 4400 வெவ்வேறு ரசாயனப்   பொருட்கள்  [chemicals] இருக்கின்றன; இவற்றில் கிட்டத்தட்ட 599 addictive வகையைச்   சார்ந்தவை  [அதாவது, மறுபடியும், மறுபடியும் உங்களைப் புகைக்க வைக்கக் கூடிய போதைப்    பொருட்கள்], இந்த 599 இல் 43 பொருட்கள் புற்றுநோய் [cancer] உண்டாக காரணமாக    இருப்பவை.

இவற்றில் சில மிக, மிக மோசமான விளைவுகளை  உண்டாக்கக்கூடியவை;  அவை, Carbon Monoxide, Nitrogen Oxide, மற்றும் Hydrogen  Cyanide  ஆகியவை.

இவை  எல்லாவற்றையும் மீறிய பிரதான வில்லன், நிகோட்டின்  [Nicotine] .  நிகோட்டின் போதை  உண்டாகக் காரணம் அது உடனடியாக நம் உடம்பில் உள்ள  epinephrine என்ற  ஹார்மோனைச் அதிக  அளவில் சுரக்கச் செய்து, அதன் மூலம் சிகரெட்  புகைப்பவர்களுக்கு  "கிக்" உண்டாக வழி  வகுக்கிறது. இதுவே பின்னர் அந்த பழக்கம்
நிரந்தரமானதாக மாற  காரணமாகிறது.

நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தைகளின் அருகில் சிகரெட் குடிப்பதன் மூலம் மேல்
கூறிய அனைத்து பலன்களையும் உங்கள் குழந்தைகளையும் அடைய நீங்கள் உதவலாம்.


நான் மேலே கூறியது எல்லாம் சின்ன பலன்கள் தான் கேன்சர் , ஆஸ்துமா,இருதய நோய்,  நுரையீரல் பாதிப்பு, என பெரிய பெரிய பலன்கள் எல்லாம் உங்களுக்காக வரிசையில்  நிற்கின்றன...


நான் சொல்லுறத சொல்லிட்டேன் இனிமேல் சிகரெட் குடிக்கதும் குடிக்காததும் உங்கள்
இஷ்டம்.


 எனது இந்த பதிவு புடிச்சிருந்தால் தயவுசெய்து உங்கள் ஓட்டையும் கருத்தையும் பதிவு  செய்யுங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி..

2 கருத்துகள்:

  1. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

    Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூறிய அனைத்து பலன்களையும் உங்கள் குழந்தைகளையும் அடைய நீங்கள் உதவலாம்

      நீக்கு