அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்.
முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டுபிடித்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே.
முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. ரோமானியர்களைப் பொறுத்தவரை, ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் அவரது மூக்கில் கழுதையை முத்தமிட வைப்பார்களாம். அப்படி செய்தால், ஜலதோஷம் போய் விடும் என்பது அவர்களது நம்பிக்கை.
அதேபோல ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.
அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.
அதேபோல வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடிவில் எக்ஸ் (X) குறியிடுவது வழக்கம். அதாவது முத்தத்தைப் பரிமாறிக் கொள்வதன் அடையாளமாக அதை வைத்துள்ளனர்.
முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.
முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக