வார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.இதுபோன்று, பைக்கில் நீண்ட தூரம் செல்பவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடனும் ,கூடுதல் முன்னேற்பாடுகளுடன் செல்வது மிக மிக மிக அவசியம்
நீண்ட தூர பயணம் செல்பவர்கள் மிகுந்த திட்டமிடுதலுடன் செல்ல வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு ஸ்லைடரிலும் வழங்கியுள்ளேன்.
தோசைக்கல் டயரா?
உங்களது பயணத்தை சுகமானதாக்குவதற்கு டயர்களின் பங்கு மிக முக்கியம். எனவே, டயர்கள் அதிக தேய்மானம் கொண்டதாக இருந்தால் மாற்றிவிடுங்கள். பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம்.
பிரேக் ஷூ கிளட்ச், பிரேக் ஷூ ஆகியவை நன்றாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்து விடுங்கள்.
ஹெட்லைட், இன்டிகேட்டர், டேஞ்சர் விளக்குகள் சரியாக இயங்குகிறதா, எலக்ட்ரிக்கல் பிரச்னை எதுவும் இல்லையா என்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, ஹெட்லைட் டிம், பிரைட் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
டூல்ஸ் கிட் பஞ்சர் மற்றும் ஸ்பார்க் பிளக்கை சரிபார்க்க உதவும் உபகரணங்கள் அடங்கிய டூல்ஸ் கிட்டை எடுத்துச் செல்வது அவசியம்.
பேலன்ஸ் பையில் பொருட்களை வைக்கும்போது கனமான பொருட்களை கீழேயும், எடை குறைந்த பொருட்களை மேலேயும் அடுக்கி எடுத்துச் செல்லுங்கள். இதனால், பைக்கின் பேலன்ஸ் அதிகரிக்கும்.
ஆவணங்கள் வாகன பதிவு சான்று, மாசுக்கட்டுப்பாட்டு சான்று, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றையும் மறக்காமல் கையில் எடுத்து வைத்துக் கொண்டு புறப்படுங்கள்.
போக்குவரத்து விதிகள் பிற மாநிலம் அல்லது அடுத்த நாட்டு எல்லையை கடக்க வேண்டியிருந்தால் அந்த பகுதியின் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் ஹெல்மெட் அவசியமா உள்ளிட்ட விபரங்களை அறிந்து செல்வது மிக முக்கியம்.
வானிலை பயணம் செல்லும் நாட்களின்போது தட்பவெப்பம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஒரு ஐடியாவோடு செல்வது அவசியம். கையில் ஒரு சிறிய பாக்கெட் ரேடியோ இருந்தால் உதவிகரமாக இருக்கும்.
எனர்ஜி பார் கையில் எனர்ஜி பார் மற்றும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
முதலுதவி பெட்டி முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியும் அவசியம் இருத்தல் அவசியம்.
ஒருவேளை... எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தால், உங்களை பற்றிய விபரங்கள் எளிதில் தெரியும் வகையில், சிறிய டைரி அல்லது அட்டைகளை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுஙகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக