ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பாங்க் லாக்கர் 256 பவுன் நகை மாயம்:அதிகாரி கைவிரிப்பு: போலீஸ் குழப்பம்

திருநெல்வேலி:நெல்லை பாங்க் லாக்கரில் வைத்த காங்கிரஸ் பிரமுகரின் 256 பவுன் நகைகள் குறித்து இன்னமும் துப்பு துலங்கவில்லை.திருநெல்வேலி ஜங்ஷனில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் கிளையில் காங்கிரஸ் பிரமுகர் வேணுகோபால் லாக்கர் பயன்படுத்திவந்தார். அவர் தமது லாக்கரில் வைத்திருந்த நகைகள் 256 பவுனையும் காணோம் எனவும் அவை திருடுபோயிருக்கலாம் எனவும் புகார் கொடுத்தார். வேணுகோபாலுக்கு ஆதரவாக காங்.,கட்சியினர் அங்கு கூடி பாங்க் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜங்ஷன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இதுகுறித்து பாங்க் தரப்பில் கூறுகையில், ஒவ்வொரு லாக்கருக்கும் உரிய மாஸ்டர் சாவி மட்டுமே எங்களிடம் இருக்கும். வாடிக்கையாளரின் சாவி இருந்தால் தான் நகைகளை வைக்கவும், எடுக்கவும் முடியும். எனவே லாக்கரை கையாளும் வாடிக்கையாளர்தான் அவற்றிற்கு பொறுப்பு என்றார்கள். தற்போது சம்பவம் நடந்துள்ள இதே பாங்கில் 2010 ஜனவரி 4ம் தேதி இந்திய கம்யூ.,முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணனின், லாக்கரில் இருந்த சுமார் 80 பவுன் நகை காணாமல் போயுள்ளது. அதற்கு முன்பும் ஒரு ஆசிரியர் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் காணாமல் போயுள்ளது. இந்த பாங்கில் லாக்கர் நகைகள் மாயம் குறித்து புகார்கள் வந்தும் இதுவரையிலும் நடவடிக்கையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக