திருநெல்வேலி . பாளையங்கோட்டை . சங்கரன்கோவில் . அம்பாசமுத்திரம் . தென்காசி . சிவகிரி . செங்கோட்டை . நாங்குநேரி . இராதாபுரம் . ஆலங்குளம் . வீரகேரளம்புதூர் ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . ராதாபுரம் . நாங்குநேரி
Ad
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
சிறுமலையில் கொட்டிக் கிடக்குது அதிசயம்:அழிவின் விளிம்பிள் அரிய மூலிகைகள்
திண்டுக்கல்:தமிழத்திற்கு இயற்கை அருளிய கொடை ஏராளம். கொடைக்கானல், ஊட்டி, கொள்ளிமலை, ஏலகிரி என, பசுமை போர்த்திய பகுதிகள் குறிப்பிடத்தக்கவை. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையிலும் இயற்கை பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிறுமலை வாழை, பலா, பிரசித்தி பெற்றவை. ஏராளமான மூலிகைகளும் உண்டு. சிறுமலை காற்றை சுவாசிப்பதே தனி சுகம் தான். அங்கு வசிக்கும் பூர்வகுடிகளின் வாழ்க்கை முறை, விலங்குகள், விவசாயம் குறித்து அறிந்து கொள்ள, மலையை சுற்றினோம். இதுவரை அறிந்து கொள்ளாத தகவல்கள் ஏராளம்!
பூர்வ குடிகள்:இங்கு தாளக்கடை, வேளாண்காடு, தென்மலை, அகஸ்தியர்புரம், புதூரில் பலியர் இனத்தினர் வசிக்கின்றனர். தேன் எடுத்தல், கடுக்காய் பிடுங்குவது, மரப்பட்டை, மூலிகைகள் சேகரித்தல் பிரதான தொழில். வாழை, பலா, காபி, மிளகு தோட்டங்களில் கூலி வேலையும் செய்கின்றனர். இவர்களுக்கு நிரந்தர வீடுகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. மருத்துவ சிகிச்சையும் குதிரைக் கொம்பு தான். பிரசவம், அவசர சிகிச்சைக்கு "டோலி' கட்டிக் கொண்டு கீழே வருகின்றனர்.
இந்த இனத்தை சேர்ந்த கணேசன், மலையரசன் கூறுகையில், "பெண்கள் 5 முதல் 8 கி.மீ., சென்று தேன், மூலிகை சேகரிக்கின்றனர். எந்த வசதியும் இல்லை. கிழங்கு, ரேஷன் அரிசியை சாப்பிடுகிறோம். மலை அருவி, நீர் ஊற்று தான் குடிநீர். தன்னார்வ நிறுவனத்தினர் குடிசை அமைத்து தந்துள்ளனர். அரசு, உதவித் தொகை வழங்கவேண்டும் ,' என்றனர்.
சிக்கலில் மலை வாழை:சிறுமலை வாழை ருசிக்கு, ஈடுஇணை இல்லை. நாக்கில் பட்டவுடன் தித்திக்கும். மருத்துவ குணம் உண்டு. நட்ட ஒரு ஆண்டில் பலன் தர துவங்கும். தற்போது மலை வாழையில் முடிகொத்து நோய் அதிகரித்துள்ளது. வாழை மரம் காய்ந்து, காய்ப்பு திறன் மங்கி வருகிறது. மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் இருந்த மலை வாழை விவசாயம் சுருங்கி வருகிறது. இதனால் சிறுமலை வாழை அழியும் அபாயம் இருப்பதாக, இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.இது குறித்து விவசாய உதவி இயக்குனர் சின்னராஜ் கூறியது:மலைவாழை சாகுபடி தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது. முடிகொத்து நோய் ஏற்பட்ட வாழை மரங்களை பிடுங்கி, எரிக்க வேண்டும். முடிகொத்து நோய் கிருமி, மண்ணில் புதைந்து தாக்கும். காற்றிலும் பரவும். விவசாயிகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, பராம்பரிய சிறுமலை வாழையை, நோயில் இருந்து காக்க முடியும், என்றார்.
அரிது...அரிது:இங்கு அரிய மூலிகைகள் இருப்பதாக, சென்னை மத்திய சித்த மருந்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மூலிகைகளை, அங்கு வசிப்போர் பறித்து விற்கின்றனர். இவர்களுக்கு மூலிகையின் மகத்துவம் தெரியாது. வியாபாரிகள் மலிவு விலைக்கு வாங்கி, கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
இங்கு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஆய்வு நடத்த உள்ளனர். அதற்கு பின், எந்த வகை மூலிகைகள் உள்ளன என, தெரிய வரும். மூலிகைகளை அழிவில் இருந்து காக்க, தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.அம்மாடியோவ்:இங்கு வனத்துறையின், 16 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. வன நிர்ணய சட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி நடந்தது. இதை எதிர்த்து சிலர், சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசுக்கு, கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்கு பின் சிறுமலையில் பட்டா நிலங்கள் 10 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இருக்கும். இதன் மூலம் அரிய மூலிகைகளும் பாதுகாக்கப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக