சனி, 14 ஜனவரி, 2012

நண்பர்களுக்குப் பால் ஊற்றும் இலங்கைத் தமிழன்!

நண்பர்களுக்குப் பால் ஊற்றும் இலங்கைத் தமிழன்!
14 Jan 2012

மனித வாழ்வில் பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படங்களை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போது அது வெறும் பொழுதுபோக்கு என்பதற்கு அப்பால் சென்று அதுதான் வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு இளைஞர், யுவதிகளின் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது.

அந்த வகையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையிடப்பட்ட விஜயின் நண்பன் படம் தற்போது இலங்கையின் தமிழர் பகுதி திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

அதன் தொடக்க விழாவில் எமது இளைஞர்கள் நண்பன் படத்தின் கதாநாயகன் விஜயின் படத்துக்குப் பாலாபிசேகம் செய்து தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற கொடிய யுத்தம். இதனால் ஏற்பட்ட அழிவுகள். இது எல்லாவற்றுக்கும் காலாதிகாலமாக அந்த யுத்தத்தின் வடுக்கள் தமிழ் மக்கள் பின் நிழல்களாகப் பின் தொடர்கின்றன.

இத்துணை துயரங்களைச் சுமந்து நிற்கும் தமிழினத்தைப் பற்றி இம்மியும் சிந்திக்காது இந்தியப் பட கதாநாயகனுக்குப் பாலாபிசேகம் செய்கின்றனர் நம் இளைஞர்கள்.

வாழ்க தமிழினம்! வளர்க தமிழ் மொழி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக